சவுக்கு சங்கர் ஆட்கொணர்வு வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளையும் பெண் போலீசாரையும் கொச்சைப்படுத்தி பேசியதாக கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கரை சில தினங்களுக்கு முன்பு தேனியில் வைத்து கைது செய்தனர். 

அவர் கைது செய்யப்பட்டபோது உடன் இருந்த இருவரை நபர்களையும் கைது செய்து விசாரணை நடத்திய போலீசார் மூவர் மீதும் கஞ்சா வழக்கை பதிவு செய்தனர். 

இந்த நிலையில் நேற்று முன்தினம் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கரை சந்தித்த அவரது தரப்பு வழக்கறிஞர் சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு வைத்ததோடு இது குறித்து நீதிபதி நேரில் சென்று விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை மனு அளித்தார். 

அதேவேளையில் சவுக்கு சங்கர் தாயார் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது சென்னை உயர் நதிமன்றத்தில் ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர் சவுக்கு சங்கர் சிறையில் தாக்கப்படவில்லை என விளக்கம் அளித்தார். 

அப்போது சவுக்கு சங்கர் தாயார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சவுக்கு சங்கரை காணொளி காட்சி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். இதனை அடுத்து சவுக்கு சங்கரின் தாயார் தொடர்ந்து ஆட்கொணரும் மனு மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் நாளைக்கு ஒத்தி வைத்துள்ளது. 

மேலும் சவுக்கு சங்கரின் உடல்நிலை குறித்து தெளிவான அறிக்கை அளிக்க வேண்டும் என கோவை சட்ட சேவைகள் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madrashc ask report in SavukkuShankar beating in jail


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->