டி.டி.எஃப் வாசனுக்கு நிபந்தனையுடன் ஜாமீன்!! சென்னை உயர்நீதிமன்றம் ஆணை!! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் அருகே நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த யூடியூபருக்கு டிடிஎஃப் வாசனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. 

காஞ்சிபுரம் அடுத்த பாலுச்செட்டி சத்திரம் அருகே நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படுத்தியதாக டிடிஎஃப் வாசன் மீது கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தது. அதை தொடர்ந்து 40 நாட்களுக்கும் மேலாக வாசன் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஜாமீன் வழங்க கோரி காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவை நீதிபதி நிராகரித்ததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்க கோரி மேல்முறையீடு செய்திருந்தார்.

அந்த மனுவும் நிராகரிக்கப்பட்டதால் மீண்டும் இரண்டாவது முறையாக ஜாமீன் வழங்க கோரி டிடிஎஃப் வாசன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் தலைமையிலான அமர்வின் முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது வாசன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாசலின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் அவரால் வாகனம் இயக்க முடியாது எனவும், 40 நாட்களுக்கு மேல் அவர் சிறையில் இருப்பதால் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

டிடிஎஃப் வாசன் தரப்பு வழக்கறிஞரின் வாதத்திற்கு காவல்துறை தரப்பு எதிர்ப்பு தெரிவிக்காததால் 3 வாரங்களுக்கு பாலுச்செட்டி சத்திரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MadrasHC gave condition bail to TTF Vasa


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->