அடுத்த ட்விஸ்ட்.. இனி அரசியல், மத படங்களுக்கும் தடை.? தமிழக அரசுக்கு நோட்டீஸ்.!! - Seithipunal
Seithipunal


சென்னையைச் சேர்ந்த தேவதாஸ் காந்தி வில்சன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடையை தமிழக முழுவதும் அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 

மேலும் கார்களில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். 

அதேபோன்று வாகனங்களின் கண்ணாடிகளில் மதச் சின்னங்கள், அரசியல் கட்சித் தலைவர்களின் படங்களை உட்ட தடை விதிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ள நிலையில் மனுதாரரின் மனு மீது பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

ஏற்கனவே வாகனங்களில் காவல்துறையினர், மருத்துவர், வழக்கறிஞர், ஊடகவியலாளர் என ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு சென்னை உயர் நதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் அனைத்து விதமான ஸ்டிக்கர்களை ஒட்டுவதற்கும் தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madrashc order to response TNGovt in striker case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->