வள்ளலார் சர்வதேச மையம் - தமிழக அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!!
Madrashc order to Tngovt response to vallalar international center case
கடலூர் மாவட்டம் வடலூரில் அமைந்துள்ள வள்ளலார் சத்திய ஞான சபை முன்பு வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதற்கான அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டுள்ள நிலையில் பாஜகவை சேர்ந்த வினோத் ராகவேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவர் வடலூர் சத்திய ஞான சபை நிலத்தில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனவும், வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தடை வதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கை இன்று விசாரணைக்கு வந்த போது வடலூரில் சத்திய ஞான சபை நிலத்தில் வள்ளலார் சர்வதேச மையத்தில் என்னென்ன வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து தமிழக அரசு விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
English Summary
Madrashc order to Tngovt response to vallalar international center case