அறக்கட்டளை சொத்துகளை தனி நபர்கள் பெயருக்க மாற்ற முடியாது.!! நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.!! - Seithipunal
Seithipunal


அறக்கட்டளைகளுக்கு தானமாக வழங்கிய சொத்துக்களை இனி நபர் பெயரில் மாற்ற முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த நெமிலியில் உள்ள தன்னுடைய சொத்துகளுக்கு ஆளவந்தார் அறக்கட்டளை பெயரில் பட்டா வழங்கப்பட்டுள்ளதால் அந்த பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் கே.என் சாமி என்பவர் வழக்கு தொடர்ந்தார். 

அந்த மனுவில் ஆளவந்தார் தன்னுடைய சகோதரர் மகன் முத்துகிருஷ்ணன் பெயரில் எழுதி வைத்த சில சொத்துக்களை அவருடைய உறவினரான தன்னுடைய பெயரில் எழுதி வைத்ததாக குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் அந்த சொத்துக்களை ஆளவந்தார் அறக்கட்டளை பெயருக்கு நிர்வாகிகள் மாற்றி விட்டதாகவும் அந்த மனுவில் அவர் குற்றம் சாட்டி இருந்தார். இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியன் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது முத்துகிருஷ்ணனின் இறப்பு சான்றிதழ் போலியானது எனவும், இது தொடர்பாக செங்கல்பட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும், ஆளவந்தாரால் கோவில்களுக்கு எழுதி வைக்கப்பட்ட சொத்துக்களின் விவரங்களையும் நீதிமன்றத்தில் அரசு தரப்பு தாக்கல் செய்தது.

கடந்த 1997 ஆம் ஆண்டு முத்துகிருஷ்ணன் இருந்ததாக மனுதாரரும், 1936 ஆம் ஆண்டு இறந்ததாக அரசு தரப்பும் கூறியதால் இறப்பு சான்றிதழ் குறித்து உண்மைத்தன்மை அறிய காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார். 

கடந்த 1943 ஆம் ஆண்டு முத்துகிருஷ்ணன் மகன் தாக்கல் செய்த உரிமையியல் வழக்கை கொண்டு கே.என் சாமி தாக்கல் செய்த இறப்பு சான்றிதழ் போலியானது என நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் போலி சான்றிதழ் உருவாக்கியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி ஆளவந்தார் அறக்கட்டளை சொத்துக்களை நிர்வகிப்பதற்காக மேலாளராக நியமிக்கப்பட்ட முத்துகிருஷ்ணன் மறைவுப் பிறகு சொத்துக்களை உரிமை கொண்டாட யாருக்கும் உரிமை இல்லை என தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அறக்கட்டளைகளுக்கு தானமாக வழங்கப்பட்ட சொத்துக்களை தனி நபர்களுக்கு மாற்ற முடியாது என கூறி இந்த மனுவை தள்ளுபடி செய்ததோடு, ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை நான்கு வாரத்தில் அகற்ற வேண்டும் எனவும் நீதிபதி அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். 

மேலும் எந்த நோக்கத்திற்காக ஆளவந்தார் அறக்கட்டளை தொடங்கப்பட்டதோ அந்த நோக்கத்திற்காக மட்டுமே அறக்கட்டளையிலிருந்து கிடைக்கக்கூடிய வருமானங்கள் செலவிட வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் சுட்டிக்காட்டி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MadrasHC verdict Alavandar trust donated properties cannot be transferred to individuals


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->