பேசியது தவறு.. ஆனால் "தகுதி நீக்க முடியாது".. உதயநிதிக்கு எதிரான வழக்கில் அதிரடி.!! - Seithipunal
Seithipunal


சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக இந்து முன்னணி மாநில செயலாளர் மனோகர், அமைச்சர்கள் உதயநிதிக்கு எதிராகவும், மற்றொரு செயலாளர் கிஷோர் குமார், அமைச்சர் சேகர்பாபுவிற்கு எதிராகவும், மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் ஆ.ராசாவிற்கு எதிராகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகளை நீதிபதி அனிதா சுமந்த் விசாரித்த நிலையில அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து கடந்த ஆண்டு நவம்பர் 23 ம் தேதி இந்த வழக்குகளின் மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்து முன்னணி நிர்வாகிகள் தொடந்த இந்த வழக்குகளில் நீதிபதி அனிதா சுமந்த் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளார்.

அதில், சனாதன தர்மம் குறித்து அமைச்சர் உதயநிதி பேசியது தவறு என்றாலும் பதவி நீக்கம் செய்ய அவசியமில்லை. அதனால் மனுதாரர் கோரிக்கைகள் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. மனுதாரர் கேட்கும் கோரிக்கையில் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது, எதன் அடிப்படையில் அமைச்சர்கள் பதவியில் நீடிக்கிறார்கள் என கேள்வி எழுப்ப முடியாது. நாடு முழுவதும் பல மாநிலங்களில் வழக்கு தொடரப்பட்டது அதில் எந்த தீர்ப்பும் வரவில்லை என குறிப்பிட்ட தோடு வழக்கை முடித்து வைத்தார் நீதிபதி அனிதா சம்பத். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madrashc verdict in Sanadana Dharma case against udhayanithi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->