மதுரை எய்ம்ஸ் தலைவர் நாகராஜன் திடீர் மரணம்..!! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தலைவராக கடந்த அக்டோபர் மாதம் நரம்பியல் சிகிச்சை நிபுணரான மருத்துவர் நாகராஜன் நியமிக்கப்பட்டார். மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகள் துவங்கப்படாத நிலையில் அதன் வளாகம் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் இயங்கி வருகிறது. 

இந்த நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக நியமிக்கப்பட்ட மருத்துவர் நாகராஜன் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக நியமிக்கப்பட்ட இவர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகவும் இருந்துள்ளார். இவரின் மறைவுக்கு பலதரப்பட்ட மக்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai AIIMS Chairman Nagarajan passed away


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->