தரம் உயர்த்தப்படும் மதுரை விமான நிலையம் - இனி கூடுதல் சேவைக்கு வாய்ப்பு.! - Seithipunal
Seithipunal


மதுரை விமான நிலையத்தில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், மதுரை விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில், பயணிகளின் வருகையை அடிப்படையாக கொண்டு, மதுரை உள்ளிட்ட 6 விமான நிலையங்களின் தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. 

அதாவது, மதுரை, அகர்தலா, போபால், சூரத், உதய்பூர், விஜயவாடா உள்ளிட்ட விமான நிலையங்கள் ஏ.பி.டி. மூன்றாம் தர நிலையிலிருந்து, 2-ம் தர நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்ததாவது:- 

"இந்திய அளவில், விமான நிலையங்களில் பயணிகளின் வருகை, புறப்பாடு மற்றும் அதிகரிக்கும் விமான சேவை, பயணிகளின் உடைமைகளை சோதனையிடும் மையம் உள்ளிட்டவைகளை அடிப்படையாக கொண்டு, விமான நிலையங்கள் தரம் உயர்த்தப்படுகிறது.

அதன் அடிப்படையில், தற்போது மதுரை விமான நிலையம் 3-ம் தரநிலையில் இருந்து 2-ம் தரநிலைக்கு உயர்ந்துள்ளது. இதன் மூலம், மதுரை விமான நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகள் மேம்படுத்தப்படும். கூடுதலாக விமான சேவைகள், சோதனை மையம், பயணச்சீட்டு மையம், அலுவலர்களின் எண்ணிக்கை உள்ளிட்டவை அதிகரிக்கப்படும்" என்றுத் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madurai airport upgradation


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->