பா.ஜ.க தலைவரின் மாமனார் கொலை! 8 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கிய குற்றவாளி!
Madurai BJP leader father in law killed
மதுரை, திருமோகூர் அருகில் உள்ள ராஜ கம்பீரம் பகுதியைச் சேர்ந்தவர் கல்லாணை (வயது 60). இவர் நான்கு வழிச்சாலையில் உள்ள வராகி அம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றி வந்தார்.
இவர் கடந்த 2015ம் ஆண்டு இரவு கோயில் அருகே இறந்த நிலையில் கிடந்துள்ளார். மேலும், கோயிலில் இருந்த உண்டியல் மற்றும் பீரோ உடைக்கப்பட்டு இருந்தது.
இது சம்பவம் குறித்து ஒத்தக்கடை போலீஸார் வழக்கு பதிவு செய்து, கோவிலில் இடத்தில் இருந்து கை ரேகைகளை சேகரித்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதனிடையே, கடந்த 2016ம் ஆண்டில் திண்டுக்கல் நகர காவல் நிலைய எல்லையில் திருட்டு வழக்கு ஒன்றில் கைதாகி தண்டனை பெற்று வரும், திருச்சி திருவெறும்பூர் அருகிலுள்ள வடக்கு காட்டூரைச் சேர்ந்த அமரேசன் மகன் நிர்மல் (30) மதுரை சிறையில் இருக்கும் இவரது ரேகையோடு கொலை, கொள்ளை வழக்கில் பதிவான கைரேகைகள் ஒத்து போனது தெரிய வந்தது.
இதனால் ஒத்தக்கடை போலீசார் நிர்மலை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இவர் திருச்சியில் இருந்து மதுரைக்கு வந்தபோது, செலவிற்கு பணம் இல்லததால் வராகி அம்மன் கோயில் உண்டியலை உடைக்க முயன்றதும், அதனை தடுக்க வந்த கல்லாணையை கட்டையால் அடித்ததில் அவர் உயிரிழந்ததாகவும் போலீசாரிடம் ஒப்புக் கொண்டார்.
இதனை அடுத்து, போலீசார் நிர்மல் மீது கொலை, கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டார். போலீஸார் இதற்கான ஆவணங்கள் சிறை நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.
இதற்கிடையே கொலை செய்யப்பட்ட கல்லாணை மதுரை மாநகர பா.ஜ.க தலைவர் மகா.சுசீந்திரன் மாமனார் என்பதை போலீஸ் தரப்பில் தெரிவிக்கின்றன.
English Summary
Madurai BJP leader father in law killed