இதில் மத சாயமோ, சாதி சாயமோ இல்லை - அமைச்சர் மூர்த்தி விளக்கம்! - Seithipunal
Seithipunal


மதுரை புத்தகத் திருவிழாவில் மாணவிகள் சாமி ஆடிய விவகாரம் குறித்து அமைச்சர் மூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.

இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தெரிவித்தாவது, "சமத்துவம், சகோதரத்துவத்தை வளர்க்கக்கூடிய இடம் மதுரை.

புத்தகத் திருவிழாவில் கிராமிய பாடல் மட்டுமே ஒலிக்கப்பட்டது. இதில் மத சாயமோ, சாதி சாயமோ இல்லை, தவறான தகவலை பரப்ப வேண்டாம்.

தமிழ்நாடு அரசின் இலவச பட்டா வழங்குவதில் கூட அரசியல் தலையீடு இல்லாமல் அதிகாரிகளே பயனாளிகளை தேர்வு செய்துள்ளனர்.

மதுரையில் இலவச பட்டா வழங்குவது குறித்து அறிவிப்பை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின நாளை மறுநாள் (செப்.09) வெளியிடுவார்.

மதுரை அனைத்திற்கும் அப்பாற்பட்ட ஊர். மதுரை என்பது எல்லா சமுதாயமும் இருக்கக்கூடிய இடம். திமுக ஆட்சி என்பது எல்லா தரப்பு மக்களுக்குமான ஆட்சி.

மதுரை புத்தகத் திருவிழாவில் தினமும் 2 மணி நேரம் கலை நிகழ்ச்சி நடைபெறும் என சொன்னார்கள். நேற்று கலை நிகழ்ச்சியில் பயன்படுத்தியது கிராமிய பாடல்கள் மட்டுமே தவிர, வேறு மதப் பாடலோ, சமுதாயப் பாடலோ இல்லை” என்று அமைச்சர் தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai Book Festival School Students issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->