மதுரை சித்திரை திருவிழாவில் சோகம்! - Seithipunal
Seithipunal


கடந்த மாதம் 23-ந் தேதி மதுரை சித்திரை திருவிழா மீனாட்சி அம்மன் கோவிலில் தொடங்கியது. கடந்த 1-ந் தேதி அழகர் கோவில் கள்ளழகர் கோவிலில் சித்திரை திருவிழா தொடங்கியது. 

தொடர்ந்து 2-ந் தேதி மீனாட்சி அம்மன் கோவிலில் திருக்கல்யாணமும், 3-ந் தேதி தேரோட்டமும் கோலாகலமாக நடைபெற்றது. இந்த 12 நாள் சித்திரை திருவிழா நேற்றுடன் நிறைவடைந்தது.

அழகர் கோவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதற்காக மதுரைக்கு புறப்பட்டவருக்கு, வித விதமான ஆயுதங்கள் செறிந்த கள்ளழகர் திருக்கோலம் அணிவிக்கப்பட்டு, கண்டாங்கி புடவை கட்டி தங்கப்பல்லக்கில் கள்ளழகர் மதுரைக்கு புறப்பட்டார். 

ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு அழகருக்கு எதிர்சேவை அளித்து வரவேற்றனர். சர்க்கரை கிண்ணத்தில் தீபம் ஏற்றி பெண்கள் அழகருக்கு வரவேற்பு கொடுத்தனர்.

இந்நிலையில், மதுரை சித்திரை திருவிழாவை பார்க்க வந்தவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.

பக்தர்கள் கூட்டத்தில் சிக்கிய அந்த நபர் ஆழ்வார்புரம் தடுப்பணையில் மூழ்கி இறந்ததாக போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madurai Chithirai thiruvizha 2023 accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->