பெரும் பதற்றம்.. இழுத்துப் பூட்டப்பட்ட மதுரை ஆட்சியர் அலுவலக கதவுகள்.!! - Seithipunal
Seithipunal


மாற்றுத்திறனாளிகள் போராட்டம் எதிரொலியால் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கதவுகள் இழுத்து மூடப்பட்டன. இலவச வீட்டு மனை பட்டா மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்று திறனாளிகள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளுடன் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த வராததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாயிலின் முன்பு அமர்ந்து காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

இதுபோன்று கடந்த ஆறு மாதங்களில் மூன்றாவது முறையாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கதவுகள் மூடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai collectorate office gate closed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->