#Justin : 'தடை செய்யப்பட்ட Free Fire மீண்டும் எப்படி.?" காவல்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி.!  - Seithipunal
Seithipunal


தடை செய்யப்பட்ட பின்னரும் குழந்தைகள் எப்படி ப்ரீ பயர் விளையாட்டை விளையாடுகிறார்கள்.? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. 

குழந்தைகள் முதல் பெரியவர் வரை ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு அடிமையாகி உயிரிழக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. ப்ளூவேல் கேம் விளையாடி பலரும் உயிரிழந்த நிலையில், அதன் பின்னர் பப்ஜி விளையாட்டை விளையாடி பலரும் தற்கொலை செய்து கொள்ள ஆரம்பித்தனர்.

மேலும், ரம்மி போன்ற சூதாட்டங்களை விளையாடி பணத்தை இழந்து பலரும் தற்கொலை செய்து கொள்வதாக அடிக்கடி செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை கொடுக்கும். இதனால், பப்ஜி விளையாட்டிற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், அடுத்ததாக பிரீ பையர் விளையாட்டினை சிறுவர்கள் பலரும் விளையாட ஆரம்பித்தனர். 

இந்த நிலையில் விளையாட்டு தடை செய்யப்பட்ட நிலையில், மீண்டும் எப்படி விளையாடப்படுகிறது என்று மதுரை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

அதில், "ஃபிரீ ஃபையர் விளையாட்டு முற்றிலும் தடை செய்யப்பட்டு விட்டதாக கூறப்பட்டது. ஆனால், இப்பொழுதும் குழந்தைகள் இந்த விளையாட்டை விளையாடுவதை காண முடிகிறது. அப்படியெனில் காவல்துறையும், சைபர் கிரைமும் என்னதான் செய்து கொண்டிருக்கிறது.?" என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madurai court about free fire game


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->