"ஒருபுறம் போதையில்லா தமிழ்நாடு?" டாஸ்மாக் அமைக்க வேற இடம் இல்லையா.? தமிழக அரசை சாடிய நீதிபதிகள்.!
Madurai court warning to Tn Govt about tasmac
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நற்பவளக்கொடி எனும் கிராமத்தைச் சேர்ந்த பழனிசாமி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "இடமாற்றம் செய்யப்பட்ட மதுபான கடை ஒன்று கல்வி நிலையங்களுக்கு அருகில் செயல்படுகிறது. இவர்கள் மது அருந்திவிட்டு மது பாட்டில்களை கல்வி நிலையத்தில் போட்டு விடுகின்றனர்.
இதனால் இந்த பகுதியில் வரும் மாணவ, மாணவிகள் அனைவரும் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே இந்த கடையை அகற்ற வேண்டும்" என்று அவர் கோரிக்கை வைத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் புதிய மதுபான கடை கல்வி நிறுவனத்திற்கு அருகில் ஏன் அமைக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பினர்கள்.
மேலும் தமிழக அரசு தரப்பில் கல்வி நிறுவனம் செயல்படாமல் இருப்பதாக கூறப்பட்டது. கல்வி நிறுவனத்திற்கு அருகில் மதுபான கடை அமைக்க கூடாது என்பது புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு தெரியாதா என்று நீதிபதிகள் கடுமையாக சாடினார்கள். இப்படி பள்ளி கல்லூரிக்கு அருகில் டாஸ்மாக்கை திறந்தால் மாணவர்கள் கெட்டுப் போக மாட்டார்களா?
ஒருபுறம் போதையில்லா தமிழ்நாடு என்று கூறிவிட்டு மறுபுறம் கல்லூரிக்கு பள்ளிக்கு அருகில் மதுபான கடைகளை திறந்தால் எப்படி? இதனால் தான் சமூகம் கேட்டு குட்டிச்சுவராக ஆகி உள்ளது. என்று கூறி அந்த மதுபான கடை செயல்பட இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
தொடர்ந்து இந்த கல்வி நிறுவனம் செயல்பாட்டில் இருக்கிறதா? எத்தனை பேர் அங்கே படிக்கின்றனர்? புதிய டாஸ்மாக் இடமாற்றம் செய்யப்படும் போது அருகில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் கோயில்கள் எவ்வளவு தூரத்தில் இருக்கின்றன என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
English Summary
Madurai court warning to Tn Govt about tasmac