எல்லை மீறும் போதை மாத்திரை விற்பனை - ஆட்சியர் எடுத்த அதிரடி முடிவு.! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு பகுதிகளில், சிறார்கள் அதிகளவு போதை மாத்திரைகள், போதை டானிக்குகளை பயன்படுத்தி வருவதால் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து கொண்டே வருகிறது. 

இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை மாவட்ட குழந்தைகள் நல அலகு சார்பில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், சிறார்கள் போதைக்கு அடிமையாவதை கட்டுப்படுத்த வேண்டும், போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் மருந்தகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தனர்.

இந்த நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ’’மதுரை மாவட்டத்தில் மருந்துகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் சட்டம் – 1940 மற்றும் விதிகள்-1945 அட்டவணைகள் “X” and ‘H’, ‘H1’Drugs” குறிப்பிட்டுள்ள மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யும் அனைத்து மருந்து கடைகளிலும் சிசிடிவி கட்டாயம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மதுரையில் உள்ள அனைத்து மெடிக்கல் ஷாப்களிலும் 30 நாட்களுக்குள் சிசிடிவி பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சிசிடிவி பொருத்தாவிட்டால், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஆய்வின் போது சிசிடிவி பொருத்தாத மதுரை கடையின் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madurai district collector action against drugs sales


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->