குழந்தைகளை கணவரிடமிருந்து மீட்டுத் தரகோரிய வழக்கு - அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்.!! - Seithipunal
Seithipunal


குழந்தைகளை கணவரிடமிருந்து மீட்டுத் தரகோரிய வழக்கு - அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்.!!

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஷாஜு என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட்கொணர்வு மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தனது இரண்டு குழந்தைகளைக் கணவர் சட்டவிரோதமாக கடத்தி சென்று வைத்துள்ளார். 

ஆகவே, எனது மகன் மற்றும் மகளை மீட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு தெரிவிக்க வென்றும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ஸ்ரீமதி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. 

இந்த நிலையில், இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிபதிகள், இந்த வழக்கின் மனுதாரருக்கும், எதிர் மனுதாரருக்கும் கடந்த 2002-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. தம்பதியினருக்கிடையே ஏற்பட்ட பிரச்சினையால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனுதாரரின் முதல் மகன் ஏற்கனவே பதினெட்டு வயதை பூர்த்தி அடைந்து விட்டார். அதனால், அவருக்கு இந்த வழக்கில் நிவாரணம் வழங்க இயலாது. அதே போல் ஏழு வயதாகும் மகளை தனது கணவர் ஆனந்த் என்பவர் வலுக்கட்டாயமாக அழைத்து சென்றுவிட்டதாக மனைவி குற்றம் சாட்டுகிறார். 

தம்பதியினருக்கு இடையே உள்ள பிரச்சினையால் குழந்தைகளை அழைத்து செல்லப்பட்டதை ஆட்கொணர்வு மனுவாக விசாரிக்க முடியாது. அதனால், சம்பந்தப்பட்ட குடும்ப நல நீதிமன்றத்தை அணுகி விலக்கு பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்து இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madurai hc dismissed case of childrens seeking handover


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->