உண்மையை மறைத்து வழக்குத் தொடர்ந்த LIC நிறுவனதிற்கு 2 லட்சம் அபராதம்.!! - Seithipunal
Seithipunal


உண்மையை மறைத்து வழக்குத் தொடர்ந்த LIC நிறுவனதிற்கு அபராதம் விதித்த நீதிமன்றம்.!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி பகுதியில் கொண்டரெட்டி என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் 1982 ஆம் ஆண்டு திருநெல்வேலி வருவாய்த்துறை அதிகாரிகள் கொடுத்த சாதிச்சான்றிதழை சமர்ப்பித்து இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் 1984 ஆம் ஆண்டு எழுத்தராக பணியில் சேர்ந்தார்.

அதன் பின்னர் LIC அவருடைய சாதி சான்றிதழை சரிபார்ப்பதற்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பி உள்ளது. அதன் படி ஆட்சியரும் கார்த்திகேயனின் சாதிச்சான்றை சரி பார்த்து அது உண்மை தன்மை உடையது என்று 1990ல் அறிக்கை அளித்தார்.

இதனிடையே கார்த்திகேயனுக்கும், அவரது சகோதரருக்கும் பதவி உயர்வு கிடைத்ததால், மீண்டும் இவரது சாதி  சான்றிதழை சரிபார்க்க LIC மாநில கூர்நோக்கு குழுவுக்கு கடிதம் அனுப்பியது. இதையறிந்த கார்த்திகேயனின் சகோதரர் ஏற்கனவே சரிபார்க்கப்பட்ட தனது கொண்டாரெட்டி சாதி சான்றிதழை மீண்டும் சரி பார்ப்பது தவறு என்று 1997ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் ஏற்கனவே மாவட்ட ஆட்சியரால் சரிபார்க்கப்பட்ட ஜாதி சான்றை மீண்டும் சரிபார்க்க LIC அலுவலகம் அனுப்பியது தவறு, ஆகவே இந்த விசாரணை கடிதத்தை ரத்து செய்வதாகவும், ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் அளித்த உத்தரவை உறுதிபடுத்தியும் உத்தரவிடபட்டது.

இதையடுத்து, LIC நிறுவனம் கார்த்திகேயன் பழங்குடி இனத்தைச் சார்ந்தவர் அல்ல என்று புகார் கடிதம் வந்துள்ளது. அதனால், கார்த்திகேயன் ஜாதி சான்றிதழை சரிபார்க்க உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கௌரி உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், "ஏற்கனவே கார்த்திகேயனின் சாதிச் சான்றிதழ் இரண்டு முறை உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் கார்த்திகேயனின் சாதிச் சான்றை சரி பார்க்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் LIC வழக்கு தொடுத்த போது 1990 ஆம் ஆண்டு சரி பார்க்கப்பட்ட தகவலை தன்னுடைய வாக்குமூலத்தில் சொல்லாமல் உண்மையை மறைத்து உள்ளார்கள். 

மதிப்புமிக்க அரசு நிறுவனமான LIC நீதிமன்றத்தில் இந்த உண்மையை மறைத்து வழக்கு தொடர்ந்ததற்காக 2 லட்ச ரூபாய் அபராதமாக செலுத்த வேண்டும். இந்த தொகையை சென்னை புற்றுநோய் சிகிச்சை ஆராய்ச்சி மையத்திற்கு வழங்க வேண்டும்.

LIC நிறுவனம் இந்த தொகையை வழக்கு தாக்கல் செய்வதற்காக வாக்குமூலம் தயார் செய்த அதிகாரியிடமிருந்து வசூலித்துக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும், கார்த்திகேயனுக்கு சேர வேண்டிய ஓய்வு கால பலன்கள் அனைத்தையும் LIC நிறுவனம் நான்கு வாரத்திற்குள் வழங்க வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madurai high court fined to lic company for hide true


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->