கோட் ரிலீஸ் - பிளக்ஸ், பேனர் வைக்க உள்ளாட்சி நிர்வாகத்தை அணுகலாம் - மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு.!
madurai high court order goat movie baner and plex local administration permission
விஜய் மக்கள் இயக்கத்தின் தேனீ மாவட்ட தலைவரான லெப்ட் பாண்டி, மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் தெரிவித்து இருந்ததாவது:-
"நடிகர் விஜய் நடித்த கோட் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. அதன் படி தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியிலும் இந்த படம் வெளியாகிறது. இந்த நிலையில் எங்கள் பகுதியில் உள்ள 3 தியேட்டர்கள் முன்பாக பிளக்ஸ் பேனர் மற்றும் ஒலிபெருக்கிகள் வைப்பதற்கு திட்டமிட்டுள்ளோம்.
இதற்காக அனுமதி கோரி கடந்த மாதம் 22-ந்தேதி காவல் அதிகாரிகளிடம் மனு அளித்தோம். இதுவரை அனுமதி வழங்கவில்லை. எனவே கோட் சினிமா வெளியாகும் தியேட்டர்கள் முன்பு பிளக்ஸ், பேனர்கள் மற்றும் ஒலிபெருக்கிகள் வைக்க அனுமதிக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்" என்று தெரிவித்து இருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பேனர்கள் வைக்க சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்தை மட்டுமே அணுக முடியும் என்று கூறினார். இதை பதிவு செய்துக்கொண்ட நீதிபதி, மனுதாரர் உள்ளாட்சி நிர்வாகத்தை அணுகி உரிய அனுமதி பெற்றுக்கொள்ளலாம்" என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தார்.
English Summary
madurai high court order goat movie baner and plex local administration permission