கோயில்களின் போலி இணையதளங்களை முடக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கோயில்களின் பெயரில் உள்ள போலி இணையதளங்களை முடக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்குத் தொடர்பான விசாரணை, இன்று நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்தியநாராயணன் பிரசாத் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது 

இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள், "தமிழகம் முழுவதும் கோயில் பெயரில் உள்ள அங்கீகரிக்கப்படாத, சட்டவிரோதமான மற்றும் போலி இணையதளங்களை முடக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அதுமட்டுமல்லாமல், போலி இணையதளங்களை இயக்குவோர் மீது உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயிலின் அங்கீகரிக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து பொதுமக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madurai high court order to temple fake websites block


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->