மதுரை | துக்க நிகழ்ச்சிக்கு போன குடும்பம்! மொத்தமாக வாரி சுருட்டிய கும்பல்!
Madurai home robbery police inquiry
மேலூர் அருகே பேராசிரியர் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கபட்டுள்ளது.
மதுரை: மேலூர் அருகே ஒத்தக்கடை புறநகர் பகுதி வரைவாளன் நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் ராமநாதபுரத்தில் உள்ள அரசு விவசாய கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சோனியா. இவர் மதுரை பாண்டிகோவிலில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் மென் பொறியாளராக பணியாற்றி உள்ளார்.
இவர்கள் இருவரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உறவினரின் துக்க நிகழ்ச்சிகாக வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றிருந்தனர். இதை கண்காணித்த மர்ம நபர்கள் நேற்று நள்ளிரவு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவை உடைத்து அதிலிருந்த 45 சவரன் நகை மற்றும் ரூ. 35 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்களை கொள்ளையடித்தனர்.
பாலசுப்ரமணியம் வீட்டின் கதவு உடைந்த நிலையில் இருந்ததை பார்த்த, அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து இது குறித்து பாலசுப்பிரமணியனுக்கு தொலைபேசி மூலம் தகவல் அளித்தனர்.
தகவல் அறிந்து வெளியூரில் இருந்து வீட்டுக்கு வந்து பார்த்த பாலசுப்ரமணியம், வீட்டில் இருந்த நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருப்பதுதெரிய வந்து சோனியா, ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி தடயவியல் நிபுணர்கள் மூலம் கைரேகைகள் சேகரிக்கப்பட்டன. திருடு போன நகைகளின் மதிப்பு ரூ. 25 லட்சம் ஆகும்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இதனிடையே பேராசிரியர் வீட்டின் அருகே உள்ள குமரன் நகரில் மற்றொரு வீட்டில் புகுந்த கொள்ளை கும்பல் 4 சவரன் நகையை திருடி சென்றுள்ளது. இது தொடர்பாகவும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Madurai home robbery police inquiry