சாதி பெயருக்கு தடை! ஆப்பு வைத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை! - Seithipunal
Seithipunal


ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளைகளை அவிழ்க்கும் போது உரிமையாளர் பெயரோடு சாதி பெயரை குறிப்பிடக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மேலும், ஜல்லிக்கட்டு போட்டியின்போது உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

போட்டிகள் தொடங்கும் முன் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுப்பது குறித்து தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே, 2024 பொங்கல் பண்டிகைகைய முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை, மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார். 

அதன்படி, மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வரும் 15ம் தேதி நடைபெறும்.

ஜனவரி 16ம் தேதி பாலமேடு ஜல்லிக்கட்டும், 17ம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாடு பிடி வீரர்கள், காளைகள் பதிவு குறித்து சம்பந்தப்பட்ட துறையின் மூலமாக விரைவில் அறிவிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியை அறிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai Jallikattu District Collector order and hc order


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->