அடுத்தாண்டு மதுரை மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு: அமைச்சர் சேகர்பாபு உறுதி! - Seithipunal
Seithipunal


மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் அடுத்தாண்டு டிசம்பர் மாதத்திற்குள் குடமுழுக்கு நடைபெறும் என்று அமைச்சர் சேகர் பாபு அறிவித்தார்.
 
தமிழக சட்டசபை இன்று கூடியது. கூட்டம் தொடங்கியதும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், பிரமுகர்களின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதையடுத்து சட்டசபையில் கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.அப்போது மதுரை மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு குறித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் கேள்விக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் 63 பணிகள் நடைபெறுகிறது. அதில் 40 பணிகள் உபயதாரர்கள் மூலம் நடைபெறுகிறது.

கோவிலில் உள்ள வீர வசந்தராயர் மண்டபத்தில் 2018-ல் தீவிபத்து ஏற்பட்ட நிலையில் சீரமைப்பு பணி நடைபெறுகிறது. வசந்தராயர் மண்டபத்தை புதுப்பிக்க தேவைப்படும் 25 அடி நீளம் கொண்ட கல் தூண்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

கற்கள் பெற தலைமைச்செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தி அனுமதி பெறப்பட்டது.
25 அடி நீளம் கொண்ட கல்லை பெறுவதற்காக ரூ.19 கோடியில் ஒப்பந்தம் கோரப்பட்டு போர்க்கால அடிப்படையில் பணி நடைபெற்று வருகிறது.

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் அடுத்தாண்டு டிசம்பர் மாதத்திற்குள் குடமுழுக்கு நடைபெறும் என்று அமைச்சர் சேகர் பாபு அறிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Madurai Meenakshi temple consecration to be held next year Minister Sekar Babu


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->