வெடித்தது திமுகவுடன் பகை! விசிக கொடி கம்பம் அகற்றம்! கொடியேற்ற வந்த திருமாவளவனுக்கு அதிர்ச்சி!
Madurai Pudhur VCK Flag Issue And DMK Politics
மதுரை, புதூர் பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்ததாக கூறி விடுதலை சிறுத்தை கட்சி கொடி கம்பத்தை காவல்துறை அகற்றியுள்ளது.
புதூர் பகுதியில் விசிக கட்சியினரால் நடப்பட்டிருந்த 20 அடி உயர பழைய கொடி கம்பம் ஆக்கிரமிப்பில் உள்ளதாக, இன்று மதியம் ஒரு மணி அளவில் அகற்றப்பட்டுள்ளது.
விடுதலை சிறுத்தை கட்சி தொடங்கிய போது முதன் முறையாக திருமாவளவனால் புதூர் பகுதியில் இந்த கொடி கம்பம் நடப்பட்டது.
ஏற்கனவே 20 அடி உயரத்தில் இந்த கொடி கம்பம் நடப்பட்டிருந்த நிலையில், அதனை அகற்றி விட்டு 62 அடி உயரத்திற்கு கொடி கம்பத்தை உயர்த்தி நட விடுதலை சிறுத்தை கட்சியினர் முயன்று உள்ளனர். இதற்கு காவல்துறை தரப்பில் அனுமதி வழங்க மறுக்கப்பட்டது.
இன்று மதுரை வந்த திருமாளவன், இந்த 62 அடி உயர விடுதலை சிறுத்தை கட்சி கொடி கம்பத்தில் கொடியேற்ற இருந்த நிலையில், தற்போது இது அகற்றப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொடி கம்பம் அகற்றப்பட்டதை கண்டித்து மதுரை புதூர் பகுதியில் விடுதலை சிறுத்தை கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று இரவு இந்த விவகாரம் தீவிரமாக வெடித்த நிலையில், இன்று காலை ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று திருமாவளவன் பேசிய காணொளி ஒன்றை அவரின் சமூக வலை பக்கத்தில் இரண்டு முறை பகிர்ந்து அதனை டெலிட் செய்திருந்தார்.
இது மறைமுகமாக திமுகவுக்கு விடுதலை சிறுத்தை கட்சி திருமாவளவன் கொடுத்த நெருக்கடி என்று சொல்லப்பட்ட சொல்லப்பட்டது.
இந்த நிலையில், விடுதலை சிறுத்தை கட்சியின் கொடி கம்பத்தில் கொடியேற்ற வந்த திருமாவளவனுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக அந்த கொடி கம்பமே அகற்றப்பட்டிருப்பது, இரண்டு கட்சிகளுக்கும் இடையே மறைமுக பனிப்போர் நடந்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Madurai Pudhur VCK Flag Issue And DMK Politics