அம்மா உணவகத்தில் பூரி, வடை, ஆம்லெட்..? வெளியான பரபரப்பு காணொளி.!
madurai puthur amma unavagam food issue
மறைந்து முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் தொடங்கப்பட்ட 'அம்மா உணவகம்' மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் உலக நாடுகளையும் திரும்பி பார்க்க வைத்த ஒரு திட்டமாக இது அமைந்தது.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இந்த அம்மா உணவகத்தை முடக்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்ததாக பொதுமக்கள் தரப்பில் இருந்தும், அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்தும் கடும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இதனை அடுத்து அம்மா உணவகங்கள் தொடர்ந்து நடைபெறும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இருந்தபோதிலும் அவ்வப்போது அம்மா உணவகங்கள் மூடப்போவதாக அடிக்கடி சர்ச்சைகள் எழுந்து வருகிறது.
இந்நிலையில், மதுரை மாநகராட்சியில் உள்ள ஒரு அம்மா உணவகத்தில், அனுமதி இல்லாமல் பூரி, வடை, ஆம்லெட் உள்ளிட்ட உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பரபரப்பு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இது குறித்து பிரபல தனியார் செய்தி தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியின் அடிப்படையில் கீழ்வரும் செய்தி தொகுக்கப்பட்டு வழங்கப்படுகிறது.
மதுரை மாநகராட்சியில் உள்ள ஒரு அம்மா உணவகத்தில், மாநகராட்சியின் அனுமதியின்றி பூரி, வடை, ஆம்லெட் வழங்கப்படுவதாக ஒரு காணொளி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி கொண்டிருக்கிறது.
மதுரை புதூர் பகுதியில் அமைந்துள்ள அந்த அம்மா உணவகத்தில் விற்பனை செய்யக் கூடிய இட்லி, பொங்கல், சப்பாத்தி உள்ளிட்ட உணவுகள் விற்பனை செய்வதோடு மட்டுமல்லாமல், மாநகராட்சியின் அனுமதி இல்லாமல் பூரி, உப்புமா, வடை, ஆம்லெட் என பல்வேறு உணவகங்கள் விற்பனை செய்து வருவதாக காணொளி ஒன்று வெளியாகி உள்ளது" இவ்வாறு அந்த செய்தி தெரிவிக்கிறது.
English Summary
madurai puthur amma unavagam food issue