மதுரை கனமழை வெள்ளம்: மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


மதுரையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் பொதுமக்களுக்கு பயன்தரும் வகையில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் விடுத்துள்ள அறிவிப்பில், "மதுரை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. மழைக்காலங்களில் கனமழை குறித்த தகவல்கள், வானிலை முன்னெச்சரிக்கை, தற்போதைய வானிலை, பெறப்பட்ட மழை அளவு, நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு உள்ளிட்ட விபரங்களை தமிழிலேயே அறிந்துகொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு TN- Alert என்னும் கைப்பேசி செயலியை உருவாக்கியுள்ளது. 

இந்த செயலியினை பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து பருவநிலை தொடர்பான அனைத்து தகவல்களும் உடனுக்குடன் அறிந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் பேரிடர் காலங்களில் பேரிடர் இயற்கை இடர்பாடுகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க கீழ்காணும் உதவி எண்ணினை தொடர்பு கொள்ளலாம்.

மாநில கட்டுப்பாட்டு அறை கட்டணமில்லா (Toll Free) தொலைபேசி எண்1070
மாவட்ட கட்டுப்பாட்டு அறை கட்டணமில்லா (Toll Free) தொலைபேசி எண்1077
மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை 0452-2546161 - Whatsapp No 9655066404


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai Rain Floods HelpLine


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->