மதுரை | பள்ளி மாணவர்களுக்கு நோய் தொற்று! அச்சத்தில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள்!
Madurai students Infection Parents and teachers fear
விளாங்குடி பகுதியில் அடிப்படை வசதிகளின்றி செயல்படும் அரசு பள்ளியை முறையாக பராமரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை: விளாங்குடி 20-வது வார்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எல்.கே.ஜி. முதல் 8-ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் உள்ள கழிப்பறைகள் முழுவதுமாக சேதமடைந்து, சுவர்கள் அனைத்தும் விரிசல் ஏற்பட்டு கீழே விழும் நிலையிலும் தரை பராமரிப்பின்றி வெடிப்புகளுடன் பெயர்ந்து காணப்படுகிறது.
மேலும் பள்ளியில் போதுமான அளவு தண்ணீர் வசதி இல்லாததால் கழிப்பறைகள் பராமரிக்காமல் உள்ளதாக தெரிகிறது. இதனால் கழிப்பறையை பயன்படுத்தும் மாணவ, மாணவிகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது.
இது குறித்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் பள்ளி வளாகம் அருகே அப்பகுதி மக்கள் கால்நடைகள் காட்டுவதால், அவற்றின் கழிவுகள் அகற்றாமல் பள்ளி அருகிலேயே இருப்பதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
இது தொடர்பாக பல முறை புகார்கள் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதாக தெரிகிறது. மாணவ-மாணவிகளின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு பள்ளியில் சீரற்ற நிலையில் இருக்கும் தண்ணீர் தொட்டி, கழிப்பறைகள், பள்ளி வளாகங்கள் போன்றவை முறையாக பராமரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
English Summary
Madurai students Infection Parents and teachers fear