கலைஞரை மதிப்பதால் தனது பிறந்தநாளை மாற்றிக்கொண்ட இளையராஜா - அவரே கூறிய தகவல்!
Maestro IlaiyaRaja Changed His Birthday On Behalf Of His Respect On Kalaignar
ஆண்டு தோறும் ஜூன் 2ம் தேதியை இளையராஜாவின் பிறந்தநாளாக அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இன்றும் சமூக வலைத்தளங்களில் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு தனுஷ் நடிக்கும் "இளையராஜா" படத்தின் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அருண் மாதேஸ்வரன் இயக்கும் இப்படத்தில் நடிகர் தனுஷ், இளையராஜா கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 25ம் தேதி இளையராஜாவின் மகள் பவதாரிணி உடல்நலக்குறைவால் காலமாகிவிட்டார்.
இந்நிலையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த இளையராஜா, "இந்த ஆண்டு என் பிறந்தநாளை நீங்கள் எல்லோரும் கொண்டாடுகிறீர்கள். ஆனால் என்னால் இந்த ஆண்டு என் பிறந்தநாளை கொண்டாட முடியவில்லை. என் மகளை பறிகொடுத்துள்ள காரணத்தால் உங்களுக்காகத் தான் இந்த வருடம் இந்தக் கொண்டாட்டம்" என்று கூறிய இளையராஜா தொடர்ந்து,
உண்மையில் என் பிறந்தநாள் ஜூன் 3ம் தேதி தான். ஆனால் 3ம் தேதி கலைஞரின் பிறந்தநாளும் வருகிறது. தமிழ் மொழிக்காக கலைஞர் செய்த சேவையில் ஒரு துளி கூட நான் செய்யவில்லை. எனவே தான் ஜூன் 3ம் தேதியை தமிழ்நாடு கலைஞரின் பிறந்தநாளாகத் தான் கொண்டாட வேண்டும் என்று கருதியே என் பிறந்த நாளை ஜுன் 2ம் தேதி கொண்டாடும்படி என் ரசிகர்களிடம் வேண்டிக்கொண்டுள்ளேன்" என்று நெகிழ்ச்சியாக கூறினார்.
English Summary
Maestro IlaiyaRaja Changed His Birthday On Behalf Of His Respect On Kalaignar