வசமாக சிக்கும் மகா விஷ்ணு! சிக்கலில் தலைமை ஆசிரியை! அடுத்தடுத்த உத்தரவுகள்!  - Seithipunal
Seithipunal


சென்னை அசோக் நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு தன்னம்பிக்கையூட்டும் நிகழ்ச்சி என்ற பெயரில், மஹாவிஷ்ணு என்ற பேச்சாளரை அழைத்து வந்து பேச வைத்துள்ளனர். 

அவர் மூட நம்பிக்கையை விதைக்கும் வகையில், "மாணவிகள் அழகாக இல்லாததற்கு கடந்த பிறவிகளில் செய்த பாவம் தான் காரணம்" என்று  என்று முழுக்க முழுக்க பகுத்தறிவு இல்லாமல் சொற்பொழிவை நிகழ்த்தினார்.

இதுகுறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், மகா விஷ்ணு என்பவருக்கு சொந்தமான திருப்பூர் குளத்துப் பாளையம் பகுதியில் உள்ள பரம்பொருள் அறக்கட்டளை மையத்தில் போலீசார் விசாரணை நடந்து வருகிறது.

இதற்கிடையே, மஹாவிஷ்னு பேசிய பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆர்.தமிழரசி அவர்கள் திருவள்ளூர்  மாவட்டம் கோவில்பதாகை எனும் ஊரிலுள்ள மேல்நிலைப்பள்ளிக்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் கண்ணப்பன் தலைமையில் துறை ரீதியான விசாரணையும் அசோக் நகர் காவல் நிலைய inspector மற்றும் AC தலைமையில் மஹாவிஷ்னு நடவடிக்கை மீதான விசாரணயும் தொடங்கி உள்ளது..

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MahaVishnu Ashok Nagar Govt School


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->