அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் இணையும் மலையாள நடிகர் - யார் தெரியுமா?
malaiyalam heroine joined work good bad ugly
தென்னிந்திய நடிகர் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'குட் பேட் அக்லி'. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகன்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. இந்த படத்திற்கு இசையமைக்க இருந்த தேவிஸ்ரீ பிரசாத் விலகிய நிலையில், அவருக்கு பதிலாக தற்போது பிரபல இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து இந்தப் படத்திற்கான டப்பிங் பணியை சமீபத்தில் நடிகர் அஜித்குமார் நிறைவு செய்துள்ளார். இந்தப் படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாக உள்ளது. தற்போது இந்தப் படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், 'குட் பேட் அக்லி' படத்தின் ஒரு சில காட்சிகள் மட்டும் நேற்று முதல் எடுக்கப்பட்டது. அப்போது பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ படப்பிடிப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளார். இவர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
malaiyalam heroine joined work good bad ugly