மயிலாடுதுறை || மனைவியை அடித்து கொலை செய்த கணவன் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி அருகே மாமாக்குடி அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் கேசவன். இவருக்கு கடந்த மூன்று ஆண்டுக்கு முன்பு பிள்ளைபெருமாள் நல்லூர் ஊராட்சி வேப்பஞ்சேரியை சேர்ந்த மகாலட்சுமி என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. 

இவர்களுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கேசவனும் தினமும் மது அருந்திவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று நள்ளிரவு வழக்கம்போல் மது அருந்திவிட்டு வீட்டிற்கு சென்ற கேசவன், மனைவி மகாலட்சுமியிடம் தகராறு செய்துள்ளார். 

இதில் ஆத்திரமடைந்த கேசவன் அருகில் கிடந்த கட்டையை எடுத்து அடித்ததில், படுகாயம் அடைந்த மகாலட்சுமி உயிருக்கு போராடிய நிலையில் கிடைத்துள்ளார். இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் மகாலட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மகாலட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் கொடுத்த தகவலின் படி போலீசார் விரைந்து சென்று, மனைவியை அடித்துக்கொலை செய்த கேசவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மது போதையில் மனைவியை கணவன் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrest kill wife in mayiladuthurai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->