நெல்லையில் பரபரப்பு -  மூன்று ஏ.டி.எம்களை அடித்து நொறுக்கிய போதை ஆசாமி - போலீசார் அதிரடி.! - Seithipunal
Seithipunal


நெல்லையில் பரபரப்பு -  மூன்று ஏ.டி.எம்களை அடித்து நொறுக்கிய போதை ஆசாமி - போலீசார் அதிரடி.!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் மற்றும் வி.எம்.சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களின் வசதிக்காக பல்வேறு வங்கிகளின் ஏ.டி.எம்.கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், கே.டி.சி. நகர் பகுதியில், உள்ள ஏ.டி.எம். அறைக்குள் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் போதை ஆசாமி ஒருவர் புகுந்துள்ளார்.

அப்போது, அவர் எந்திரத்தின் முகப்பு ஸ்கிரீனை கல்லால் தாக்கி உடைத்து வி.எம்.சத்திரம் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு இருந்த இரண்டு ஏ.டி.எம். அறைகளிலும் புகுந்து ஏ.டி.எம் இயந்திரத்தை கம்பு மற்றும் கல்லால் தாக்கி சேதப்படுத்தியுள்ளார். 

இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்தத் தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்துள்ளனர். அப்போது அந்த நபர் மதுபோதையில்  தள்ளாடியபடி நின்றுள்ளார். அவரை போலீசார் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரித்தனர். 

அதில் அவர் நெல்லையை அடுத்த தாழையூத்து செல்வி அம்மன்கோவில் தெருவை சேர்ந்த முத்து என்பதும், ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்தால் பணத்தை எடுத்து கொள்ளலாம் என்று மதுபோதையில் இந்த செயலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

man arrested for boke three atm machines in tirunelveli


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->