மக்களே எச்சரிக்கை! அமெரிக்காவில் இருப்பவர் பெயரில் தனிநபர் கடன் மோசடி! வாலிபர் கைது!
Man arrested for defrauding bank account of Rs 3 lakh by impersonation
ஆள் மாறாட்டம் செய்து வங்கி கணக்கில் ரூபாய் மூன்று லட்சம் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த செந்தில்குமார் ஐடி நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் கடந்த 2006 ஆம் ஆண்டு மயிலாப்பூரில் உள்ள தனியார் வங்கி கிளை ஒன்றில் சம்பள கணக்கை தொடங்கியுள்ளார். பின்னர் 2009 ஆம் ஆண்டு பணி மாறுதலுக்காக அமெரிக்காவுக்கு சென்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவருக்கு தெரியாமலே அவரது வங்கி கணக்கு அடிப்படையாக வைத்து கடந்த 2021 ஆம் ஆண்டு மர்ம நபர் ஒருவர் மூன்று லட்சம் தனி நபர் கடன் பெற்றுள்ளார். பின்னர் அந்த மர்ம நபர் தனிநபர் கடனுக்காக தவணை தொகையை செலுத்தாமல் இருந்துள்ளனர்.
இதனால் வங்கி அதிகாரிகள் இது தொடர்பான குறுஞ்செய்தியை செந்தில்குமாருக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த செந்தில்குமார் இந்த சம்பவம் தொடர்பாக சென்னை கிழக்கு மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறை இது தொடர்புடைய விசாரணை நடத்தியது. முதற்கட்ட விசாரணையில் செந்தில்குமார் பெயரை பயன்படுத்தி ஆள்மாறாட்டம் மூலம் வங்கியில் தனி நபர்கள் பெற்று பண மோசடி ஈடுபட்டவர் ஆம்பூரை சேர்ந்த ராஜ்கமல் என்பது தெரிய வந்துள்ளது.
தனியார் செல்போன் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்த அவரை ஆம்பூரில் பதுங்கி இருந்தபோது போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
English Summary
Man arrested for defrauding bank account of Rs 3 lakh by impersonation