திருப்பத்தூர்: வாழைத் தோப்பின் நடுவே கஞ்சா வளர்த்த நபர் கைது.!
man arrested for ganja plant grew in thirupatur
திருப்பத்தூர்: வாழைத் தோப்பின் நடுவே கஞ்சா வளர்த்த நபர் கைது.!
தமிகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பழக்கத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது வாழைத்தோப்புக்கு நடுவே கஞ்சா பயிரிடப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாச்சியார் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராமன். 62 வயதான இவர் நாகராஜ் என்பவருடைய நிலத்தை குந்தகைக்கு எடுத்து அதில் வாழை சாகுபடி செய்து வந்துள்ளார். இந்த நிலையில், ராமன் இந்த வாழைத் தோப்புக்குள் கஞ்சா பயிரிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
உடனே அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அவர்களுக்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட வாழைத்தோட்டத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
அந்த சோதனையில், வாழை தோட்டத்தின் நடுவில் இராமன் ஏழு கஞ்சா செடிகளை பயிரிட்டு வளர்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் போலீசார் அந்த கஞ்சா செடிகளை பிடிங்கி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
இவற்றின் மொத்த எடை இரண்டரை கிலோ ஆகும். இதையடுத்து போலீசார் கஞ்சா செடி பயிரிட்ட ராமனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
man arrested for ganja plant grew in thirupatur