குடியாத்தம் அருகே 2 சிறுவர்கள் கொலை - நரபலி முயற்சியா? தீவிர விசாரணையில் போலீசார்.! - Seithipunal
Seithipunal


குடியாத்தம் அருகே இரண்டு சிறுவர்கள் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் அருகே யோகராஜ் என்பவரின் மகங்கள் யோகித், தர்ஷன். இந்த இரண்டு சிறுவர்களையும் கட்டிட ஒப்பந்ததாரரான நண்பர் வசந்த குமார் கடைக்கு அழைத்து செல்வதாக கூறி விட்டுச் சென்றுள்ளார்.

நீண்ட நேரமாகியும் சிறுவர்கள் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த சிறுவர்களின் பெற்றோர் பல இடங்களில் தேடியுள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள கோவில் அருகில் இருந்து 2 சிறுவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டது. 

இதைப்பார்த்து பெற்றோர் கதறி அழுதுள்ளனர். இந்தச் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் படி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி கட்டிட ஒப்பந்தக்காரர் வசந்த குமாரை கைது செய்தனர்.

அவரிடம் சிறுவர்கள் கொலை செய்தது குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே மனைவியை பிரிந்த வருத்தத்தில் இருந்த வசந்த குமார் சிறுவர்களை நரபலி கொடுத்திருக்கலாம் என்று அக்கம் பக்கத்தினர் தெரிவித்து வருகின்றனர். கடைக்கு அழைத்துச் செல்வதாக கூறி இரண்டு சிறுவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for kill 2 childrens in vellore kudiyaththam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->