குடிபோதையில் கூட பிறந்த தம்பியை அடித்துக் கொன்ற அண்ணன் திருச்சூரில் பரபரப்பு.!
man arrested for kill brother in thiruchoor
கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் மாவட்டம் கொரட்டிகட்டில் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் விஷ்ணு, யது கிருஷ்ணன். இவர்கள் இருவரும் திருச்சூர் ஆனந்தபுரத்தில் உள்ள கள்ளுக்கடையில் கள் குடித்துள்ளனர். அப்போது திடீரென தகராறு நடந்துள்ளது.

அப்போது ஆத்திரமடைந்த விஷ்ணு, யது கிருஷ்ணனின் தலையில் ஆயுதத்தால் அடித்தார்.
இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த புதுக்காடு போலீசார், விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்து விஷ்ணுவை கைது செய்தனர்.
இதற்கிடையே போலீசார் நடத்திய விசாரணையில், சகோதரர்களுக்கு இடையே சொத்து பிரச்சனை இருந்து வந்துள்ளதன் காரணமாக ஏற்பட்ட தகராறிலேயே யது கிருஷ்ணனை விஷ்ணு கொலை செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
man arrested for kill brother in thiruchoor