அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி - இளம்பெண்ணின் புகாரால் சிக்கிய பட்டதாரி வாலிபர்.!
man arrested for money fraud in kallakurichi
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் பகுதியைச் சேர்ந்தவர் கோபி. பட்டதாரியான இவர் திம்மாபுரம் பகுதியைச் சேர்ந்த பட்டதாரி பெண்ணான சினேகா என்பவரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ஆசைக் வார்த்தைக் கூறியுள்ளார்.
மேலும், அதற்காக கொஞ்சம் பணம் தேவைப்படும் என்றும் கூறியுள்ளார். இதனை உண்மை என்று நம்பிய அந்த பெண் ரூ. 3 லட்சம் பணத்தைக் கோபியிடம் கொடுத்துள்ளார். அதனைப் பெற்றுக்கொண்ட கோபி வேலை வாங்கித் தராமல் இருந்துள்ளார்.
நீண்ட நாட்கள் ஆகியும் வேலை வாங்கித் தராததால், சந்தேகமடைந்த பெண் கோபிக்கு செல்போனில் அழைப்பு விடுத்து வேலை வாங்குவது குறித்து விசாரித்துள்ளார். அப்போது தான் அவர் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனாவிடம் புகார் அளித்தார்.
அந்தப் புகாரின் படி மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பட்டதாரி இளைஞரான கோபி இதுபோன்று பலரை ஏமாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார் அந்த இளைஞரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பட்டதாரி வாலிபர் பணமோசடியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
man arrested for money fraud in kallakurichi