குடிபோதையில் வாலிபர் செய்த கொடூரம் - பரிதாபமாக பறிபோன 2 மாத குழந்தையின் உயிர்.!  - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, பல்லடம் தபால் அலுவலக வீதியை சேர்ந்தவர் மணிகண்டன். தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வரும் இவரது மனைவி சரோஜினி. இந்த தம்பதியினருக்கு சூர்யதாஸ் என்ற இரண்டு மாத ஆண் குழந்தை இருந்தது.

இந்தக் குழந்தையை கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிபோதையில் இருந்த மணிகண்டன் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இந்தது தாக்குதலில் குழந்தை படுகாயம் அடைந்தது. உடனே குழந்தையின் தாய் சரோஜினி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே குழந்தையின் தாய் சரோஜினி சம்பவம் தொடர்பாக பல்லடம் போலீசில் புகார் கொடுத்தார். 

அதன் பேரில் போலீசார் மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் மருத்துவனமையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இதனால், குழந்தையை தாக்கியதாக மணிகண்டன் மீது தொடரப்பட்ட வழக்கை போலீசார் கொலை வழக்காக பதிவு செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for murder 2 month baby in tirupur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->