திருச்சி: லிப்ட் கேட்டு சென்ற பெண்.. பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது.! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் லிப்ட் கேட்டுச் சென்ற பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருச்சி மாவட்டம் ரெட்டிமாங்குடி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்(46). இவர் ரெட்டிமாங்குடியிலிருந்து சிறுகனூருக்கு நேற்று முன்தினம் மதியம் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, 42 வயது பெண் ஒருவர் சுரேஷிடம் லிப்ட் கேட்டுள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணிற்கு லிப்ட் கொடுத்த சுரேஷ், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தவிட்டு அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

மேலும் இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் சுரேஷ் அந்த பெண்ணை மிரட்டியுள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு சுரேஷ் கைது செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார், லால்குடி நீதிமன்றத்தில் சுரேஷ் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண் பெரம்பலூர் மாவட்டம் சிறுகன்பூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், இவரது கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த 3 நாட்களாக திருச்சி ரெட்டிமாங்குடியில் உள்ள தனது அக்கா தங்கி இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Man arrested for raping woman who asked for a lift in Trichy


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->