"எனக்குத் திருடக் கூடத் தெரியல" ஏடிஎம் அறையில் கதறி அழுத வாலிபர் - சிறையில் அடைப்பு.! - Seithipunal
Seithipunal


"எனக்குத் திருடக் கூடத் தெரியல" ஏடிஎம் அறையில் கதறி அழுத வாலிபர் - சிறையில் அடைப்பு.!

நாகை மாவட்டத்தில் உள்ள பப்ளிக் ஆபீஸ் சாலையில் கனரா வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் இயந்திரம் ஒன்று உள்ளது இந்த இயந்திரம் உடைக்கப்பட்டுள்ளதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது ஏடிஎம் மையம் உடைக்கப்பட்ட படி இருந்தது.

இதையடுத்து போலீசார், சம்பவ இடத்திற்கு கைரேகை போலீஸார் மற்றும் மோப்ப நாய்களை வரவழைத்து தடயங்கள் சேகரித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, அதில் மர்மநபர் ஒருவர் முகமூடி அணிந்தபடி, ஏடிஎம் இயந்திரத்தை கடப்பாறை வைத்து உடைத்தும், பின்னர் பணம் எடுக்க முடியாமல் அங்கிருந்துச் சென்றதும் தெரியவந்தது. 

இந்த காட்சியை ஆதாரமாக வைத்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், கொள்ளையனை பிடிப்பதற்காக தனிப்படை அமைத்து விசாரணை செய்து வந்தனர். அதில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது நாகை பெருமாள் வடக்கு வீதியை சேர்ந்த 25 வயதான விஸ்வநாதன் என்பது தெரியவந்தது. அதன் படி போலீசார் விஸ்வநாதனை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் அளித்த பதில்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. அதன் விவரம் பின்வருமாறு:-  "வேலை இல்லாமல் சுற்றித் திரிந்து வந்த எனக்கு மது குடிக்கணும் போல் இருந்தது. ஆனால், பணத்திற்கு என்ன செய்வைத்து என்று யோசித்தபோது, ஏடிஎம்-ஐ உடைத்து பணம் எடுக்கலாம் என்று யோசனை வந்தது.

இருப்பினும் அந்த பிளான் சொதப்பிவிட்டது. என்னடா நம்மால திருடக் கூட முடியவில்லையே என்று நினைத்து, ஒரு மணிநேரம் ஏடிஎம் அறையிலேயே அழுதேன்" என்று தெரிவித்துள்ளார். இதனை பதிவு செய்து கொண்ட போலீஸார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

man arrested for robbery attempt in ATM


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->