பணிக்குச் சென்ற வருமான வரித்துறை அதிகாரி வீட்டில் கைவரிசையைக் காட்டிய வாலிபர் கைது.!  - Seithipunal
Seithipunal


பணிக்குச் சென்ற வருமான வரித்துறை அதிகாரி வீட்டில் கைவரிசையைக் காட்டிய வாலிபர் கைது.! 

சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் ராமசுப்பிரமணியன். வருமான வரித்துறை அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வரும் இவருடைய மனைவி ஆஷா. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். 

இந்த நிலையில், ராமசுப்பிரமணியன் கடந்த 25-ம் தேதி ஜீ ஸ்கொயர் நிறுவனம் தொடர்பாக நடைபெற்ற வருமான வரி சோதனையின் போது அண்ணாநகர் திமுக சட்டமன்ற உறுப்பினர் மோகன் வீட்டில் சோதனை மேற்கொள்வதற்காக பணிக்கு சென்றுள்ளார். 

அதனால், ராமசுப்பிரமணியத்தின் மனைவி ஆஷா தனது குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டில் உள்ள ஒரு அறையில் பீரோ திறக்கும் சத்தம் கேட்டுள்ளது. உடனே ஆஷா அந்த அறைக்கு சென்று பார்த்தபோது ஜன்னல் வழியாக ஒருவர் தப்பி சென்றது தெரியவந்தது. 

இதையடுத்து ஆஷா பீரோவை திறந்து பார்த்துள்ளார். அதிலிருந்த 81 லட்ச ரூபாய் மதிப்புள்ள 18 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள், ஒரு லட்சம் பணம் உள்ளிட்டவை கொள்ளை போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதைத்தொடர்ந்து, ராமசுப்பிரமணியன் திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி, போலீஸார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, கொள்ளையனை தீவிரமாக தேடிவந்தனர். இந்த சம்பவம் குறித்து நடத்திய விசாரணையில், கொள்ளையில் ஈடுபட்ட நபர் பழைய குற்றவாளி ஆனந்த் என்பது தெரியவந்தது. 

அதன் படி போலீசார் வில்லிவாக்கத்தில் பதுங்கி இருந்த கொள்ளையன் ஆனந்தை கைது செய்து நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர். வருமானவரித்துறை வீட்டில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for robbery in income tax officer home in chennai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->