வேறொருவருடன் சாப்பிடச் சென்ற பெண் தோழி - ஆத்திரத்தில் இளைஞர் செய்த கொடூரச் செயல்.!! - Seithipunal
Seithipunal


வேறொருவருடன் சாப்பிடச் சென்ற பெண் தோழி - ஆத்திரத்தில் இளைஞர் செய்த கொடூரச் செயல்.!!

கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் மாவட்டம் ஆற்றிங்கல் பகுதியைச் சேர்ந்தவர் கிரண். இவருடைய பெண் தோழி, மற்றொரு ஆண் நண்பருடன் திருவனந்தபுரத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு சாப்பிடச் சென்றுள்ளார்.

இதையறிந்த கிரண் உடனே அந்த உணவகத்திற்குச் சென்று அங்கிருந்து தன் தோழியை வீட்டில் விடுவதாக பொய் சொல்லி தன் இருசக்கர வாகனத்தில்  கடத்திச் சென்றார். இதையடுத்து கிரண் அந்த பெண்ணை களக்கூட்டம் பகுதியில் உள்ள குடோன் ஒன்றுக்கு அழைத்துசென்று கட்டிப்போட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

அதன் பின்னர் கிரண் சாப்பாடு வாங்குவதற்காக வெளியில் சென்றுள்ளார். அப்போது, அந்த பெண் அரைகுறை ஆடையுடன் அங்கிருந்து தப்பித்துச் சென்று அருகிலிருந்த வீடுகளில் உதவி கேட்டார். உடனே அவர்கள் அந்த இளம்பெண்ணுக்கு ஆடை கொடுத்ததுடன், சம்பவம் தொடர்பாக காவலர்களுக்கும் தகவல் கொடுத்தனர். 

அந்தத் தகவலின் படி விரைந்து வந்த போலீஸார் அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்திவிட்டு அவரை பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

அந்த நேரத்தில் சாப்பாடு வங்கிவிட்டுத் திரும்பி வந்த கிரணையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். நண்பனாக பழகி இளம்பெண்ணைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for sexuall harassment case in kerala


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->