கடலூர் || சிறுமியைக் கடத்தி பாலியல் தொல்லை அளித்த நபர் - கையும் களவுமாக பிடித்த போலீசார்.! - Seithipunal
Seithipunal


குடும்பத்துடன் மேல்மருவத்தூர் கோவிலுக்குச் சென்ற கடலூர் சிறுமி - வாலிபர் செய்த கொடூரம்.!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மேல்மருவத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மாரி. இவர் கடலூர் மாவட்டத்திலிருந்து குடும்பத்துடன் மேல்மருவத்தூருக்கு வந்த சிறுமி ஒருவரை சந்தித்து, அவரிடம் ஆசை வார்த்தை கூறி தனது செல்போன் நம்பரை கொடுத்துள்ளார். 

இதையடுத்து தனது சொந்த ஊருக்கு வந்த சிறுமி, செல்போன் மூலம் மாரியிடம் பேசி வந்துள்ளார். இந்த நிலையில், சிறுமியை கடலூருக்கு வரவைத்துள்ள மாரி அவரிடம் ஆசை வார்த்தை கூறி அங்கிருந்து சிறுமியை மாரி கடத்தி சென்றுள்ளார். 

இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சிறுமியை  மாரி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. 

இதைத் தொடர்ந்து போலீசார் சிறுமியை மீட்டதோடு, மாரியை சுற்றிவளைத்து பிடித்து, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for sexuall harassment to girl in cuddalore


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->