நீதிபதி பெயரை பயன்படுத்தி மகனுக்கு சீட் வாங்க முயன்ற தந்தை.! போலீசார் அதிரடி.! - Seithipunal
Seithipunal


நீதிபதி பெயரை பயன்படுத்தி மகனுக்கு சீட் வாங்க முயன்ற தந்தை.! போலீசார் அதிரடி.!

சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணி புரிந்து வருபவர் ஆனந்த் வெங்கடேசன். இவருடைய நேர்முக உதவியாளராக இருக்கும் புஷ்பலதா என்பவர் உயர் நீதிமன்ற காவல் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் ஒன்றை அளித்திருந்தார்.

அந்தப் புகாரில், "கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகிகளை தொடர்பு கொண்ட நபர் ஒருவர், நீதிபதி ஆனந்த் வெங்கடேசனின் தனிச் செயலாளர் ஸ்ரீனிவாசன் பேசுகிறேன். நீதிபதியின் மகனுக்கு உங்கள் கல்லூரியில் கம்யூட்டர் இன்ஜினியரிங் சீட்டு வேண்டும் என்று கேட்டுள்ளார். 

இதனால் சந்தேகமடைந்த கல்லூரி நிர்வாகத்தினர் எங்களை தொடர்பு கொண்டு இது தொடர்பாக விசாரித்தபோது தான் நீதிபதியின் தனிச் செயலாளர் என்று போலியாக கூறி, நீதிபதியின் மகனுக்கே சீட்டு வேண்டும் என்று கல்லூரியில் மோசடி செய்ய முயன்ற சம்பவம் தெரியவந்தது. 

ஆகவே, சம்பந்தப்பட்ட மோசடி நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த புகாரில் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி கல்லூரி நிர்வாகத்திடம் பேசிய நபரின் செல்போன் எண்ணை ஆய்வு செய்தனர். அதில் , நீதிபதி பெயரில் மோசடியில் ஈடுபட்டது சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்த வெங்கடேச பெருமாள் என்பது தெரியவந்தது. 

இதையடுத்து போலீஸார் விரைந்துச் சென்று வெங்கடேச பெருமாளைக் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், ‘நீதிபதியின் மகனுக்கு, நீதிபதியின் செயலாளரே பேசினால் கல்லூரியில் சீட் கிடைத்து விடும் என்ற எண்ணத்தில் கல்லூரியை தொடர்பு கொண்டு பேசியதாகவும், எனது மகனை கேளம்பாக்கம் கல்லூரியில் சேர்த்து படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசையில் இப்படி நடந்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார். 

இருப்பினும் போலீசார் கைதான வெங்கடேச பெருமாள் இதேபோல் வேறு ஏதேனும் மோசடியில் ஈடுபட்டுள்ளாரா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். நீதிபதியின் பெயரை வைத்து கல்லூரியில் மோசடி செய்ய முயன்ற சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for use justice name for college sear in chennai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->