ஓடும் பேருந்தில் இறங்க முயன்றவருக்கு நேர்ந்த கொடூரம்..!
Man Death in Chennai
ஓடும் பேருந்தில் பின்பக்கர சிக்கி ஒருவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை, செங்குன்றத்தில் இருந்து தண்டையார்பேட்டை வழியாக செல்லும் மாநகரப் பேருந்து தண்டையார்பேட்டை பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் முன் பக்க வாசல் வழியாக கீழே குதித்து இறங்கி உள்ளார்.
எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி அவர் விழுந்ததில் அந்த பேருந்தின் பின்பக்க சக்கரம் அவர் மீது ஏறியது. இதில் அவரது இரண்டு கால்களும் நசுங்கியது. ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.