நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞரை தாக்கிய நபர் - வீட்டில் பிணமாக மீட்பு. - Seithipunal
Seithipunal


நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞரை தாக்கிய நபர் - வீட்டில் பிணமாக மீட்பு.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ வைகுண்டம் அருகில் கால்வாய் கிராம பகுதியைச் சேர்ந்தவர் மாயாண்டி. இவருக்கு ஸ்ரீ வைகுண்டம் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நடைபெறுகிறது.

இந்த வழக்கை வழக்கறிஞர் தேவக்கண்ணன் ஆஜராகி வாதடி வந்தார். இதற்கு இடையே இவருக்கும் மாயாண்டிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இருவரும் நீதிமன்றத்திற்கு வந்த போது திடீரென தகராறில் ஈடுபட்டனர்.

இந்தத் தகராறில் ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்டனர். இதனால் பலத்தக் காயமடைந்த தேவக்கண்ணன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மேலும், மாயாண்டி லேசான காயத்துடன் வீட்டிற்குத் திரும்பி சென்று விட்டார்.

அதன் பின்னர் அவரது வீட்டிற்கு சென்ற கும்பல் ஒன்று மாயாண்டியை அறிவாலால் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். இதைப்பர்த்து ஓடி வந்து தன் கணவனை காப்பற்ற முயன்ற அவரது மனைவிக்கும் அறிவாளால் வெட்டு விழுந்துள்ளது.

இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாயாண்டியின் மனைவியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல றிந்து வந்த போலீசார் மாயாண்டி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு சம்பவம். தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man died after attack lawyer in thoothukudi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->