கடல் அழகை ரசிக்கச் சென்ற தம்பதியினர் - மனைவி கண்முன் அலையில் அடித்து சென்ற கணவர்.! - Seithipunal
Seithipunal


கடல் அழகை ரசிக்கச் சென்ற தம்பதியினர் - மனைவி கண்முன் அலையில் அடித்து சென்ற கணவர்.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் ஜெரோம் மிலாடு. ஓய்வுபெற்ற தலைமையாசிரியரான இவரது மனைவி மெல்சி லெட் அரசுப்பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். 

தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் விடுமுறையில் இருந்த தம்பதிகள் இருவரும் கணபதிபுரம் அருகில் உள்ள லெமூர் கடற்கரைக்கு கடல் அழகை ரசிப்பதற்காகச் சென்றனர்.

அங்கு இருவரும் கடலின் அழகை ரசித்தவாறு தண்ணீரில் கால்களை நனைத்துக் கொண்டு இருந்தனர். அப்போது திடீரென வந்த ராட்சச அலை ஜான் ஜெரோம் மிலாடுவை இழுத்துச் சென்றது. இதைப் பார்த்து கதறி அழுத, மனைவி மெல்சி லெட் அவரை காப்பாற்றுவதற்காகச் செநின்றுள்ளார்.

ஆனால், அவரும் கடல் அலையில் சிக்கினார். இந்தச் சம்பவம் தொடர்பாக சக சுற்றுலாப் பயணிகள் கடலோர குழும காவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி அவர்கள் வந்து அலையில் சிக்கிய தம்பதியினரை மீட்டு முதலுதவி செய்தனர்.

அதில், ஜான் மெரோம் மிலாடு மட்டும் சுய நினைவு இல்லாமல் இருந்துள்ளார். உடனே போலீசார் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஜான் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

கடல் அழகை ரசிக்கச் சென்ற ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் கடல் அலையில் சிக்கி உயிர் இழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man died for giant wave in kanniyakumari sea


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->