மனைவி இறந்த துக்கம் - மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு தந்தை தற்கொலை.!
man sucide after poisoning his son in theni
மனைவி இறந்த துக்கம் - மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு தந்தை தற்கொலை.!
தேனி மாவட்டத்தில் உள்ள போடி அருகே அணைக்கரைப்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர்கள் பெருமாள்-பானுமதி தம்பதியினர். இவர்களுக்கு ராகுல் என்ற மகன் உள்ளார். இவர் மனவளர்ச்சி குறைபாடு உடையவர்.
இந்த நிலையில், பானுமதி கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு உடல்நல குறைவினால் இறந்து போனார். மனைவி இறந்ததால் துக்கம் தங்க முடியாமல் இருந்த பெருமாள் மனவளர்ச்சி குறைபாடு உடைய தனது மகனை பராமரிக்க முடியாமலும் கஷ்டப்பட்டு வந்துள்ளார்.
இதற்கிடையே, பெருமாள் மதுபோதையில், மனவளர்ச்சி குறைபாடு உடைய தனது மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு, அதனை தானும் குடித்துள்ளார். இதில் பெருமாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ராகுல் உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரண்டு பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது ராகுல் தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ராகுல் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
man sucide after poisoning his son in theni