கன்னியாகுமரியில் சோகம் : வீட்டுக்கடனை செலுத்தமுடியாமல் தொழிலாளி தற்கொலை.!
man sucide front of train in kanniyakumari for delay pay house loan
கன்னியாகுமரியில் சோகம் : வீட்டுக்கடனை செலுத்தமுடியாமல் தொழிலாளி தற்கொலை.!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள, மேக்கோடு பகுதியைச் சேர்ந்தவர்கள் ஸ்ரீகுமார்-சிந்து தம்பதியினர் . இவர்களுக்கு மூன்று மாற்றுத் திறனாளிக் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், ஸ்ரீகுமார், கடந்த 2016 ஆம் ஆண்டு களியக்காவிளையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் 6 லட்சத்து 35,400 ரூபாய் கடன் பெற்று வீடு கட்டியிருந்தார்.
இந்தக் கடனை அசலும், வட்டியுமாக முறையாகச் செலுத்தி வந்துள்ளார். இந்த சமயத்தில், ஸ்ரீகுமாரின் மனைவி சிந்துவுக்கு திடீரென முதுகெலும்பில் பிரச்சனை ஏற்பட்டு அறுவை சிகிச்சை நடந்தது. இந்த அறுவை சிகிச்சைக்கு, லட்சக்கணக்கில் பணம் செலவானது.
இதனால் ஸ்ரீகுமாரால் வீட்டுக்கடனுக்கான தவணையை உரிய முறையில் செலுத்த முடியவில்லை. இதற்கிடையே தன் குழந்தைகளின் கல்விக்கும் செலவு செய்ய முடியாமல் தடுமாறியுள்ளார்.
இந்த நிலையில், வீட்டுக்கடனுக்கான தொகையை உரியமுறையில் செலுத்தவில்லை என்பதால் வீட்டை ஏலம் விடப்போவதாக வங்கித் தரப்பில் இருந்து ஜப்தி நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதைப்பார்த்து மனம் உடைந்த ஸ்ரீகுமார், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டுக்கடனைச் செலுத்த முடியாததால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
man sucide front of train in kanniyakumari for delay pay house loan