மூளையோ மூளை! ரேப்பிடோ புக் கஞ்சா விற்பனை! முக்கிய புள்ளியை தூக்கிய போலீஸ்! - Seithipunal
Seithipunal


சென்னை ஓட்டேரியில் ரேப்பிடோ புக் செய்து கஞ்சா விற்பனை செய்து வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கஞ்சா கடத்துவது கஞ்சா விற்பனை செய்வது போன்ற வழக்குகள் தொடர்ந்து காவல் நிலையத்தில் பதிவாகி வருகிறது.

கஞ்சாவினால் அதிக அளவில் இளைஞர் பாதிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனிடையில் சென்னை ஓட்டேரியில் ஆய்வாளர் ரமேஷ் தலைமையில் நேற்று மாலை ஓட்டேரி மேட்டுப்பாளையம் சந்திப்பில் போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை போலீசார் நிறுத்தியுள்ளனர். இருசக்கர வாகனத்தில் வந்த இருவரிடமும் போலீசார் விசாரணை செய்தனர். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்தவர் வைத்திருந்த கைப்பையை போலீசார் சோதனை செய்து பார்த்தபோது கை பையில் அரை கிலோ கஞ்சா எடுப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

இது தொடர்பாக போலீசார் இரண்டு பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில் கொளத்தூர் குமரன் நகர் பகுதி சேர்ந்த மணி என்பவர் தனியார் ஆன்லைன் செயலில் ரேப்பிட்டோ மூலம் இருசக்கர வாகனத்தை புக் செய்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த கஞ்சா விற்பனைக்கும் ரேப்பிடோ ஒட்டிய நபருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதால் அவரை காவல்துறை எச்சரித்து அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் ஏற்கனவே முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கில் சிறைக்கு சென்று இரண்டு மாதத்திற்கு முன்பு வெளியே வந்தது தெரிய வந்துள்ளது.

சிறையில் அறிமுகமான வெங்கடேசன் என்பவரின் மூலம் கஞ்சாப் போன்ற போதை பொருட்களை வாங்கி வெளி நபர்களுக்கு விற்று பணம் சம்பாதித்தது வந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. அடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man was arrested for selling ganja by booking Rapido in Otteri Chennai


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->