‘என்னை கட்டிக்கலைன்னா ஏன் உயிரோட இருக்க, செத்துப் போ!’ சிறுமியை கத்தியால் குத்திய நாடக காதலன் ரயில் தண்டவாளத்தில் பிணமாக மீட்பு.! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர், திண்டுக்கல் சாலையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். 

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 6ஆம் தேதி வீட்டிலிருந்து மாயமாகியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில், திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி பொத்தமேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த கேசவன் (22) என்பவர் கடத்தி சென்றது தெரியவந்தது. 

மேலும், சிறுமி தான் கடத்தப்பட்டதாக கூறியதால், போக்ஸோ உள்ளிட்ட வழக்குகள் கேசவன் மீது பதிவு செய்யப்பட்டது. கடந்த 90 நாட்களாக சிறையில் இருந்த கேசவன் அண்மையில் வெளியே வந்துள்ளார்.

நேற்று மாலை அந்த மாணவி வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுவிட்டு மாலை திரும்பி வந்துள்ளார். மணப்பாறை ரயில்வே மேம்பாலம் அருகே மாணவி நடந்து வந்து கொண்டிருக்கும்போது, சிறுமியை வழிமறித்த கேசவன், தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி உள்ளார்.

சிறுமி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கேசவன் ‘என்னை கட்டிக்கலைன்னா ஏன் உயிரோட இருக்க, செத்துப் போ’ என்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சிறுமியின் கழுத்து உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட பகுதிகளில் கத்தியால் குத்தி உள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த சிறுமியை மீட்ட அந்த பகுதி மக்கள், மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தலைமறைவான கேசவனை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், இன்று அதிகாலை மணப்பாறையில் ரயில் முன்பு பாய்ந்து கேசவன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MANAPARAI DRAMA LOVER SUICIDE


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->